திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை: திருநாவுக்கரசு எம்.பி. ஆய்வு
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் இன்று திருச்சி கி.ஆ.பெ மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று டீன் மற்றும் மருத்துவர் குழுவினருடன் தற்போதைய சூழ்நிலை விவரத்தை நேரில் கேட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அப்போது திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவையானவற்றை மத்திய அரசிடம் இருந்தும் மற்றும் மாநில அரசிடம் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றிட உறுதி கூறினார்கள்/ ஏற்கனவே எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 60 லட்சம் ரூபாய் சென்ற ஆண்டு ஒதுக்கி தந்தமைக்கு மருத்துவர்கள் நன்றி தெரிவித்தார்கள் மேலும் உதவிடவும் கோரிக்கை வைத்தார்கள் மேலும் சுமார் 5000 முக கவசங்களை மருத்துவமனைக்கு நேரில் வழங்கினார்