திருச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 3 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செரிவூட்டிகள் – அசத்தும் திருச்சி விமானி!!

0 575
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அசோக் ராஜா. இவர் விமானியாக பணிபுரிந்து வருகிறார். தான் ஒரு விமானியாக இருந்து பல்வேறு கட்ட சமுதாய பணிகளை செய்து வருகிறார். தற்போது இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு தன்னால் முடிந்த உதவியை செய்வதற்காக களமிறங்கியுள்ளார்.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.3 லட்சம் மதிப்பில் 3 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகளை விஎஸ்பி ஹவுசிங் குழும நிறுவனர் மற்றும் திமுக இளைஞரணி அசோக் ராஜா, நகர்ப்புற வளர்ச்சி துனை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் மதிவாணனிடம் வழங்கினார்.

 

தொடர்ந்து அசோக் ராஜா பவுண்டேசன் சார்பில்  மருத்துவமனை வளகத்தில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். இதுகுறித்து அசோக் ராஜா கூறுகையில்…. தற்போது எங்கள் பகுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு என்னால் முடிந்த இந்த சிறிய உதவியினை செய்கிறேன். அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தற்போது மரக்கன்றுகள் நடுவதற்கான முதற்கட்டமாக 50 மரக்கன்றுகளை நட்டுள்ளேன். என்னுடைய இலக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளை என்னுடைய பகுதியில் நட வேண்டும் என்பதே…” என்றார்.

இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளரும்  முசிறி எம்எல்ஏவுமான காடுவெட்டி தியாகராஜன்,மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வி. எஸ்.பி இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்

Leave A Reply

Your email address will not be published.