என்னதான் சார் கதை இந்த காவிரி பாலத்திற்கு? – முடியல……

0 598
Stalin trichy visit

இந்த காவிரி பாலத்தை பற்றி எழுதி எழுதி ஒவ்வொரு பத்திரிக்கையாளர் கைகளும் வலித்துவிட்டன….”செவிடன் காதில் ஊதிய சங்கு போல” என்ன வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் நாங்கள் இதை பற்றி சிறிதளவும் கூட கண்டுகொள்ள மாட்டோம் என பிடிவாதம் பிடிக்கும் நெடுஞ்சாலை துறையினர் ஒரு பக்கமும், மாவட்ட நிர்வாகம் மறு பக்கமாக இருந்து வருகின்றனர்!இமயமலையை விட பழமையாக உள்ள மலைக்கோட்டை மாநகரயும், தீவு போல் அமைந்துள்ள அரங்கனின் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கத்தையும் தரைவழி மார்க்கமாக இணைக்கும் ஒரு முக்கிய சாலையாக இருப்பது என்றால் அது இந்த காவேரி பாலம் சாலை தான்!!

 

பரந்து விரிந்து கடல்போல் காட்சியளிக்கும் இந்த காவிரி ஆற்றின் நடுவில் கடந்த 1976ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது இந்தப் பாலம். திருச்சி மக்களாகிய ஒவ்வொருவரும் மாலை வேளைகளில் இப்பாலத்தின் மேல் ஏறி நின்று காவிரியின் அழகை கண்டு களிப்பது, இளம் காற்று வீசும்போது மனநிம்மதியை தரும் ஒரு முக்கிய பாலமாக இருந்து வருகிறது.

சுமார் 45 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்… பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களில் சில விரிசல்களும், இடைவெளிகளும்,  பாலத்தின் மேல் உள்ள சாலையில் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. இதனால் இந்தப் பாலத்தின் மேல் கனரக வாகனங்கள் செல்லும்போது பாலமே குதித்து குதித்து விளையாடுகிறது, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வாகன ஓட்டிகள் பாலத்தின் சாலையிலுள்ள குண்டு குழியில் பலர் கீழே விழுந்து விபத்தில் சிக்கியுள்ளனர், அவசர காலங்களில் இயக்கப்படும் ஆம்புலன்ஸ் கூட அப்பகுதியில் படாதபாடுபட்டு செல்கிறது.
இதனை எல்லாம் கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்டாலும் அது ஆய்வுகளாகவே அப்படியே நின்று விடுகிறது!
கடந்த பல வருடங்களாகவே நாம் பார்க்கலாம் காவிரி பாலத்தில் ஏறி காடுகள் அமைக்கப்பட்டு எப்போதும் வேலைகள் நடந்துகொண்டே இருக்கும் ஒருபுறம் சாலைக்கு ஒட்டு போடுவதும், பாலத்தின் ஓரங்களில் டைல்ஸ் மாற்றுவதும், பாரி காடுகள் அமைத்து பல வருடங்களாக வேலை நடந்து வருகிறது. ஆனால் இந்த வேலைகளை எல்லாம் எதற்கு அவர்கள் செய்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியாது, நமக்கும் தெரியாது என்பதே நிதர்சனம்!!
இப்படியாக இந்த காவேரி பாலத்தை சீர் செய்ய வேண்டும் என்று பல அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், சாலை பயனீட்டாளர்கள், பொதுமக்கள் என தொடர்ந்து கோரிக்கை வைத்தும் போராட்டமும் கூட நடத்தி விட்டனர் ஆனால் விடிவுகாலம் வந்ததாய் தெரியவில்லை…..!!!
மேலும் இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்…. “திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி ஆற்றின் குறுக்கே பழைய பாலத்தின் அருகில் புதிதாக ஒரு பாலம் உள்ளது. இந்த பாலம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ளது. அதேபோல திருச்சி-ஸ்ரீரங்கம் இடையேயும் புதிய பாலம் கட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதனை உணர்ந்து தான் புதிய பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. புதிய பாலம் கட்டுவது நீண்ட காலத்திட்டம் ஆகும். எப்போது பணிகள் தொடங்கும் என்பது பற்றி இப்போது கூற முடியாது. அதே நேரத்தில் தற்போது உள்ள பழைய பாலத்தையும் முழு அளவில் புனரமைப்பு செய்வதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது”… என்று கூறினார்

காவேரி பாலம் தற்போதைய நிலையில் பிரசவத்திற்கு இலவசமான ஒரு பாலாமாகவும், பாலத்தின் மேல் நின்று கனரக வாகனங்கள் வரும்போது பொதுமக்கள் ஊஞ்சலாடி வருகின்றனர் என்பதே நிதர்சனம்! இதற்கு எப்போது விடிவுகாலம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Leave A Reply

Your email address will not be published.