திருச்சி குட்செட் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

0 812
Stalin trichy visit

திருச்சி ரயில்வே குட்ஷெட்டில் உள்ள லாரி பார்க்கிங்கை தெற்கு இரயில்வே டெண்டர் விட்டுள்ளது,இதில் டெண்டர் எடுத்தவர்கள் அதிகமான தொகையை கேட்பது தங்களது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர் -குறிப்பாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நான்கு மடங்கு டெண்டர் தொகை அதிகமாக இருப்பதால் இதனை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ஏற்கனவே கொரோனோ ஊரடங்கால் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கட்ட வேண்டிய வரி பணத்தை லாரி உரிமையாளர்கள் கட்ட முடியாமல் சிக்கி தவித்து வருவதாகவும், இதற்கிடையே லாரி பார்க்கிங் கட்டணம் உயர்த்தி இருப்பது மிகப்பெரிய அளவில் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால குட்ஷெட்டிற்கு வரும் வேகன்களில் இருந்து சரக்குகள் வெளியே செல்லாமல் தேங்கும் நிலை உறுவாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.