பெண் ஓட்டி சென்ற டூவிலரில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு

0 337
Stalin trichy visit

ஏகிரிமங்கலத்தை சேர்ந்த வாசுகி என்ற இளம் பெண் தன் உறவினரை பார்க்க தனது இரு சக்கர வாகனத்தில் ஸ்ரீரங்கம் வந்துள்ளார்.அவர் சுப்பிரமணியபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது வண்டியின் வலது புற ஹாண்டில் பாரிலிருந்து கண்ணாடி விரியன் பாம்பு மெதுவாக தலையை நீட்டியபடி மெதுவாக கண்ணாடியில் ஏறியது. இதனைக் கண்ட வாசுகி அலறியடித்துக்கொண்டு வண்டியை ஸ்டேண்ட் கூட போடாமல் கீழே தள்ளிவிட்டு பயத்தில் நின்றுள்ளார். அப்போது அருகில் நின்ற சிலர் இது குறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் இருசக்கர வாகனத்தில் மறைந்து போக்கு காட்டிய கண்ணாடி விரியன் பாம்பு பிடித்தனர். பாம்பு பிடிபட்டதால் அதிர்ச்சியில் இருந்து மீண்ட வாசுகி மீண்டும் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு ஊருக்கு திரும்பினார்.

 

Leave A Reply

Your email address will not be published.