தூய்மை பணியாளர்கள் குடியிருப்புகளில் மின்சாரம், குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை – இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. உறுதி
திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி வார்டு எண் 9A, பூசாரித்தெரு, முனிசிபல் காலணியில் தூய்மை பணியாளர் வசிக்கும் பகுதியில் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளி மேற்க்கூரைகள் சேதம் அடைந்தும், மின்சாரம், குடிநீர் மற்றும் இதர பிரச்சனைகளை தீர்க்கும்படி கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்று, விரைவில் சீரமைத்து தருவதாக உறுதியளித்தார்.
. உடன் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மதிவாணன், 9.A வட்ட செயலளார் சண்முகம், 8வது வார்டு வட்ட செயலாளர் மெடிக்கல் தசரதன், 10வது வார்டு வட்ட செயலாளர் சங்கர், மற்றும் மாநகராட்சி துணை செயற் பொறியாளர் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.