சித்தா- யுனானி- ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை மூலம் 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர் : சுகாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

0 673
Stalin trichy visit

தஞ்சை மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொள்ள விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தமிழகத்தில் இதுவரை கருப்பு பூச்சியை நோயால் 1736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்ஆம்ப்ட் ரிசன் மருந்துகள் மொத்தம் 45 ஆயிரம் தேவை என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். ஆனால் மத்திய அரசிடம் இருந்து வந்தது 11796 மருந்துகள் மட்டுமே வந்துள்ளது. ஆனால் இதுவரை பயன்படுத்தப்பட்டு கையில் இருப்பது என்பது 4306. இதுவரை 77 பேர் நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர்.

 

இதுவரை தடுப்பூசிகள் ஒரு கோடியே 10 லட்சம் வந்துள்ளது தடுப்பூசிகளின் அளவை பொருத்து மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெறுகிறது என்று கூறினர்.இன்று காலை 6 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது இதையும் பிரித்து விரைவில் அனுப்பபடும். 42 லட்சம் தடுப்பூசிகள் என்பதை மத்திய அரசு தெரிவித்து கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பி வருகின்றனர்.
இறப்பு விகிதத்தை குறைத்த காட்டுவதற்கான அவசியமும் இல்லை தேவையும் இல்லை இதுவரை நானும் இயக்குனர் ராதா கிருஷ்ணனும் இணைந்து 23 மாவட்டங்களில்நேரில் சென்று ஆய்வு செய்து இருக்கிறோம் நாங்கள் சந்தித்த எல்லாம் மாவட்ட ஆட்சியர்கள் இடமும் அந்தந்த மாவட்டங்களில் இழப்பை ஒருபோதும் பறக்காமல் உண்மையான இறப்பு விகிதத்தை வெளியிடவேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம் என்று கூறினார்.
பொதுவாக ஒரு நோயாளி சிகிச்சைக்காக அனுமதிக்கப் படும் போது குறைந்தது 7 முதல் 10 நாட்களுக்குள் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு விடுவார்.
ஆனால் இருபது நாளைக்கு பிறகு அவர் இறந்தால் வேறு நுரையீரல் தொற்று காரணமாக பல்வேறு காரணங்களால் அவர் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இருந்ததாகக் கூற முடியாது.கடந்த ஆட்சியிலும் கூட நீங்கள் உதாரணமாக எடுத்துக்கொண்டால் எஸ்பிபி அவர்களும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்தகுமார் .ஆகிய இருவரும் இறக்கும் போது அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று இல்லை வேறு சில காரணங்களால் அவரை அவர்கள் இறந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தியது.இதில் கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழ் பெறுவதால் பெரிய பயன் இல்லை. இதில் ஆதரவற்ற . குழந்தைகளை காப்பதற்காக இந்த சான்றிதழ் ஒரு சில நேரங்களில் .பட கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த தஞ்சைக்கு ஆய்வுக்கு செல்கிறோம். தஞ்சை மருத்துவமனைகளை நேரில் சென்று ஆய்வு சென்று ஆய்வு முடித்த பிறகு உரிய விளக்கம் கொடுக்கப்படும்.69 க்கும் மேற்பட்ட இடங்களில் சித்தா யுனானி ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டு இந்த இரண்டாவது அறையில் சுமார் 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.பேட்டியின் போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்….

Leave A Reply

Your email address will not be published.