நடிகர் விஜய்யின் பிறந்தநாள் – முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி கொண்டாடிய திருச்சி ரசிகர்கள்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரம். தமிழகத்திலேயே அதிகமான இளைஞர் பட்டாளத்தையும், ரசிகர் கூட்டத்தையும் கொண்டுள்ள ஒரு நடிகர் என்றால் அது விஜயை தான் சேரும். இந்த நிலையில் கடந்த ஜூன் 22ம் தேதி தன்னுடைய 47 வது பிறந்தநாளை நடிகர் விஜய் கொண்டாடியுள்ளார்.
ஒவ்வொரு விஜய்யின் படங்கள் திரையரங்கிற்கு வரும் நாள் தீபாவளி என்று தான் சொல்ல வேண்டும். பாலாபிஷேகம் செய்வது, கட்டவுட்கள் என அன்றைய நாள் ரசிகர்களின் மிகப்பெரிய திருவிழாக் கோலம் பூண்டதாகவே இருக்கும். திருச்சியில் உள்ள முக்கிய திரையரங்குகளில் விடியற்காலை
முதலே காட்சிக்கு விஜயின் ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருவர். இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்திற்கு மத்தியில் தமிழகம் மற்றும் நாடு முழுவதும் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்பட்ட ஒரு படமாக ஜனவரி மாதம் வெளிவந்த “மாஸ்டர்” படம் இந்த வருடத்தின் ஒரு சிறந்த படமாக இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை!
இந்தநிலையில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி புத்தூர் அமைதி நிலையம் முதியோர் இல்லத்தில் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் திருச்சி ஆர்.கே ராஜா, TVS டோல்கேட் ஜீவா, ஞானவேல், விஜய் பிரகாஷ், சரண்ராஜ், ஆட்டோ லோகு, லால்குடி லோகு, மிளகுபாறை சுப்பிரமணி, புத்தூர் நடராஜ்,மண்ணச்சநல்லூர் சுரேஷ், ஆனந்த், மலைகோட்டை நசீர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
