பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை விற்றதாக புகார்: சிறுகனூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு பணி இடைநீக்கம்.

0 775
Stalin trichy visit

ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக சிறுகனூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீஸ் ஏட்டு ராஜா ஆகிேயார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவா்களை சிறுகனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி கைது செய்து, 1,700 க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் எண்ணிக்கையை முறையாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமலும், போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை வெளியே கொண்டுவந்து தனி நபர் மூலம் ரூ. 2 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

 

 இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐஜி பாலகிருஸ்ணன் உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பால்வண்ணநாதன் சிறுகனூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து அங்கு பணியாற்றி வரும் போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் குற்றச்சாட்டுகள் உறுதியானதால் , ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை விற்றதாக இன்ஸ்பெக்டர் சுமதி  அவருக்கு உடந்தையாக இருந்த ஏட்டு ராஜா ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஸ்ணன் உத்தரவிட்டார்…

Leave A Reply

Your email address will not be published.