மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் – தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 18 முதல் 44 வயது வரை உள்ள முன் களப்பணியாளர்கள், அரசு அலுவலர்கள்,மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கோவிசீல்டு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வை மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ .கதிரவன் இன்று தொடங்கி வைத்தார். இந்த தடுப்பூசி முகாமில் முன் களப்பணியாளர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்தி வருகிறனர்.இன்று மட்டும் 300 நபர்களுக்கு தடுப்பூசியை செலுத்த இலக்கு வைத்துள்ளனர். பின்னர் பள்ளித் தலைமையாசிரியரிடம் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தேவையெனில் அவற்றினை உடனடியாக நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களை எம்.எல்.ஏ.கதிரவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் ஒன்றிய அரசு அலுவலர்கள், ஆரம்ப சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.