முழு ஊரடங்கு அமல் : திருச்சியில் போக்குவரத்தின்றி வெறிச்சோடிய சாலைகள்
கொரோனோ நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது -அந்த வகையில் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி முழுமையான ஊரடங்கு இன்று முதல் வரும் 31 ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்துவித கடைகளும் அடைக்கப்பட்டு திருச்சியில் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.திருச்சி மாநகர பகுதியில் மாநகர காவல்துறை தரப்பில் 950 க்கும் மேற்பட்ட காவலர்கள் ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூவிதி மீறலில் ஈடுபடும் வாகன 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறதுபெரும்பாலான முக்கிய சாலைகள் குறிப்பாக மேலப்புதூர், பாலக்கரை, மத்திய பேருந்து நிலையம் ,மதுரை ரோடு உள்ளிட்ட சாலை பகுதிகளில் எவ்வித வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடப்பதை காண முடிகிறது.மருத்துவமனை மற்றும் மருந்தகங்களுக்கு செல்ல எவ்வித தடையும் இல்லை.மருத்துவம் மற்றும் உயிரிழப்பு சார்ந்த தேவைகளுக்கு மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.e பதிவு செய்துள்ளவர்கள் அதற்கான சான்றுகளைக் காட்டி செல்கின்றனர்.பலரும் e பதிவு செய்துள்ளனர்.ஆனால் போலீசார் அதனை Cross Check செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது