மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் 12 தங்கம், 14 வெள்ளி பதக்கங்கள் வென்றவர்களுக்கு 46வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாராட்டு

0 341
Stalin trichy visit

மாநில அளவிலான தனித்திறன் சிலம்பம் போட்டி உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக 31.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்டம் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது .

இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பொன்மலை சாமி தற்காப்புக்குமு சார்பாக 21 பேர் கலந்துக் கொண்டு 12 தங்கம், 14வெள்ளி பெற்றவர்களுக்கு திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கொட்டப்பட்டு கோ.ரமேஷ் அவர்களும், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம் ஆகியோர் , சாமி தற்காப்பு கலைக்குழு ஆசிரியர்கள் து. ஜீவானந்தம், ஜீ. சஹானாஸ்ரீ மற்றும் வெற்றிப் பெற்றவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி பொன்னாடை போர்த்தி, பதக்கங்கள் அணிவித்து , சான்றிதழ்களை, வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.