திருமணத்திற்காக வைக்கப்பட்டு இருந்த 12 பவுன் நகை-ரூ.1 1/4 லட்சம் பணம் திருட்டு

0 19
Stalin trichy visit

திருச்சி, ஆக.6  திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், இனாம் கல்பாளையம் ரோட்டில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது55). இவரது மனைவி தனபாக்கியம். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள் ளனர். ராமமூர்த்தி வீட்டின் அருகிலேயே டீக்கடைவைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவரது இரண்டாவது மகன் பரத்ராஜ் என்பவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கோவிலில் படைப்பதற்காக கடந்த 2-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்து டன் சென்றார். அதைத்தொடர்ந்து திருமண பத்திரிகையை மதுரை அருகே உள்ள திருமங்கலத் தில் உள்ள தனது குலதெய்வ தொடர்ந்து பத்திரிகையை உறவினர்களுக்கு வைத்து விட்டு நேற்று காலை வீட் டிற்கு திரும்பி வந்தனர்.

அப்போது வீட்டின் முன்பக்க இருந்த கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, லாக்கரில் வைக்கப்பட் டிருந்த சுமார் 12 பவுன் நகை மற்றும் திருமண செலவுக்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் திருட்டு போயிருந் தது தெரியவந்தது.

இதுகுறித்து ராமமூர்த்தி மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.