நகைப் பட்டறை பூட்டை உடைத்து நகை – பணம் திருட்டு
திருச்சி, ஆக.6 திருச்சி பெரிய கம்மாள தெருவை சேர்ந்தவர் ராஜேந் திரன் (வயது 57). தங்க நகை ஆசாரியான இவர் நகை பட் டறை வைத்து நடத்தி வருகி றார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்ததும், நகை பட்டறையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.மறுநாள் காலை வந்து பார்த்த போது, கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந் தது. உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த சுமார் 7% பவுன் எடையுள்ள 26 ஜோடி கம்மல்கள், ரூ.51 ஆயிரம் திருட்டு போயிருந் தன. இதுகுறித்த புகாரின் பேரில்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.