திருச்சி விமான நிலையத்தில் 149 கிராம் தங்கம் பறிமுதல்

0 233
Stalin trichy visit

திருச்சி விமான நிலையத்தில் சாக்லெட் ஜாமில் 149கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தி வருவது தொடர் கதையாகவே உள்ளது. இதை தடுக்கும் பொருட்டு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மலேசியா தலைநகர் கோலாம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த பயணியின் உடைமைகள் சோதனையிட்ட போது 2 சாக்லெட் ஜாம் டப்பாவில் தங்கம் துண்டுகளாக இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சோதனை செய்த அதிகாரிகள் 149 கிராம் எடையுள்ள ரூபாய் 8.90லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.