சமயபுரத்தில் 15 நிமிடம் வாகன நிறுத்த போராட்டம்

0 280
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோட்டில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் இணைந்து 15 நிமிடம் வாகனம் நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

சமயபுரம் நால் ரோட்டில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் இணைந்து வாகன நிறுத்த போராட்டம் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது

இதில் மத்திய அரசும் மாநில அரசும் அதீதமான தண்டனை, ஆன்லைன் அபராதம் போன்றவற்றை கைவிட வேண்டும்,

புதிய வாகனங்கள் வாங்க அரசு மானியம் வழங்குவதுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் ஏற்பாடு செய்ய வேண்டும்,

தொழிலை முறைப்படுத்த ஆட்டோ டாக்ஸி கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்,

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மக்களுக்கு எதிரான எதிராக உள்ள மோட்டார் வாகன சட்டத்தை திருத்த வேண்டும்,

பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் டோல்கேட் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும்,

நல வாரியத்தை குளறுபடியின்றி செயல்படுத்தி வாரிய பலன்கள் ஓய்வூதியம் உயர்த்தப்பட வேண்டும், அரசே ஆன்லைன் ஆப் செயலி உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 15 நிமிடம் வாகன நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் சிஐடி மாவட்ட செயலாளர் சிவராஜ் சிறப்புரையாற்றினார் சிஐடி பகுதி தலைவர் கனகராஜ் மற்றும் மாவட்ட குழு நிர்வாகிகள் ஆட்டோ ஸ்டாண்ட் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
பளுரில் நியாயவிலைக் கடையில்பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் .பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம்,சமயபுரம் அருகே, கூத்தூர் ஊராட்சியில் உள்ள, பளுர் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் .பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் திரு.சக்திவேல் முருகன், வட்டார வளர்;ச்சி அலுவலர்கள் திருமதி.ரேவதி, திருமதி.கலைச்செல்வி, வட்ட வழங்கல் அலுவலர் திருமதி மரகதவள்ளி, கூத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.மணிகண்டன், மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.