ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் 15 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

0 361
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் ராகவேந்திரா வளைவு அருகில் மாருதி நகரில் வசிப்பவர் மோகன்(வயது 72). இவர் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 30-ந் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு தனது மனைவியுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.