முசிறி பரிசல் துறை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

0 602
Stalin trichy visit

திருச்சி முசிறியில் உள்ள பிரசித்திபெற்ற பரிசல் துறை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது – ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர்.

முசிறி பரிசல் துறை ரோட்டில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் மற்றும் போலீஸ் டிஎஸ்பி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மாரியம்மன் கோயிலிலும் ஒரே நாளில் தீமிதி விழா நடைபெற்றது –
விழாவை முன்னிட்டு காலை காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும்,
அலகு குத்தியும், தீர்த்த குடம், பால் குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மாரியம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு சந்தனகாப்பு மலர் அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார் – மாலை பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெற்றது.

பூக்குழி எனப்படும் தீமிதி விழா நிகழ்ச்சியில் காவிரி ஆற்றிலிருந்து கரகம் பாலித்து எடுத்து வரப்பட்டது,அப்போது ஏராளமான பக்தர்கள்,தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், குழந்தைகளை தோளில் சுமந்து வந்தும் தீ மிதித்து அம்மனை தரிசனம் செய்தனர்.

இரு மாரியம்மன் கோயில்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர் – கள்ளர் தெரு மாரியம்மன் கோயிலில் மருளாளி ஆட்டுக்குட்டியின் கழுத்தை கடித்து ரத்தத்
தை குடித்தார். இதனை கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.

Leave A Reply

Your email address will not be published.