திருச்சி மருத்துவர் வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை!

0 412
Stalin trichy visit

திருச்சி கருமண்டபம் கல்யாணசுந்தரம் நகரைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன்‌. மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7ஆம் தேதி நண்பரின் திருமணத்திற்காக வீட்டை பூட்டிவிட்டு திருநெல்வேலி வரை சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே அறையில் இருந்த பீரோவை உடைத்து. அதில் இருந்த 8 பவுன் நகை 40 ஆயிரம் ரொக்கம் மற்றும் பூஜை ரூமில் 3 சூட்கேஸில் இருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் முதல் மாடி பெட்ரூமில் பீரோவில் இருந்த 10 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து யோகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.