கொரோனா நோய்த்தொற்று ஒழிய ஸ்ரீரங்கத்தில் ஒன்றரை கிலோமீட்டர் அங்கப்பிரதட்சணம் செய்த முதியவர்!

0 535
Stalin trichy visit

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும்,பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர்‌ திருக்கோவிலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் தரிசனம்‌ செய்கின்றனர்.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் பேரளத்தை கிராமத்தை சேர்ந்த நாகராஜன்‌(78) என்ற வைணவ பக்தர் உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று நோய் ஒழிவதற்க்காக ஸ்ரீரங்கத்தில் உள்ள 1.5 கிலோ மீட்டர்‌நீளமுள்ள முக்கிய வீதியான 4 உத்திர வீதியில் காயத்திரி மந்திரம் சொல்லிக்கொண்டே அங்கப்பிரதட்சணம் செய்தார்.

இறுதியாக ஸ்ரீரங்கத்தின் தெற்கு கோபுரத்தில் அங்கப்பிரதட்சணத்தை நிறைவு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் உலகையே உலுக்கி வரும் கொரோனா நோயை ஒழிப்பதற்க்காக நம்பெருமாளிடம் வேண்டி அங்கபிரதட்சணம் செய்தேன் என்று தெரிவித்தார்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy

Leave A Reply

Your email address will not be published.