குடியுரிமை திருத்த சட்ட மசோதவை எதிர்த்த முதல்வருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நன்றி தெரிவித்து தீர்மானம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்ட மசோதவை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் சார்பு அமைப்பான திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி பாலக்கரை காஜா கடை சந்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி தெற்கு இளைஞர் அணி மாவட்ட தலைவர் பி.அஜீம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தை கிராஅத் ஒதி தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் முஹம்மது கவுஸ் தொடங்கி வைத்தார். கூட்டத்தில் திருச்சி தெற்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஹாஜி ஜி.எச்.ஹக்கீம் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ்நாடு வஃக்ப் வாரிய தலைவர் எம்.அப்துர் ரஹ்மான் தயார் ஹாஜியானி ஐனுல் மர்லியா சில தினங்களுக்கு முன்பு வபாத் ஆகிவிட்டார்கள் அவர்களுடைய மகஃபிருத்தாகவும் யாசின் ஒதியும் சிறப்பு து ஆ ஒதி துவா செய்யப்பட்டது.

கூட்டத்தில் திருச்சி தெற்கு யூத் லீக் மாவட்ட நிர்வாகிகள் தங்களது பல்வேறு கருத்துக்களை தெரிவித்து யூத் லீக் நிர்வாகம் திறம்படசெயல்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கருத்துக்களை தெரிவித்தார்கள். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் ஹாஜி வி.எம்.பாரூக், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.கே.எஸ். ஜமால், தெற்கு மாவட்ட துணைத் தலைவர் மவ்லவி எஸ்.ஏ.எச். உமர் பாரூக் மகழரி, ஜமால் முஹம்மது கல்லூரி பேராசிரியர் ஷேக் பரீத், திருச்சி தெற்கு மாவட்ட யூத் லீக் பொருளாளர் சாதிக்குல் ஆமீன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகளை குறித்தும் தெற்கு மாவட்டத்தில் யூத் லீக் பணிகளை குறித்து விரிவாக பேசினார்.
கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்ட மசோதவை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். புதுதில்லியில் படுகொலை செய்யப்பட்ட சகோதரி சபியா சைபிகொலையாளிகளை கைது செய்யவும் இது சம்மந்தமாக வழக்கை சி.பி.ஐ. வசம் வழக்கு தொடர அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். டிசம்பர் மாதத்திற்கு முன்பு திருச்சி தெற்கு மாவட்ட யூத் லீக் சார்பில் உறுப்பினர்கள் சேர்ப்பது, தாலுகா, வார்டு ஆகிய பகுதிகளில் நிர்வாக அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி தெற்கு மாவட்ட யூத் லீக் சார்பில் தனியார் நிறுவனங்களுடன் பங்களிப்புடன் வேலை வாய்ப்பு முகாம் விரைவில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசு கண்டிப்பதோடு விலை உயர்வால் பொதுமக்கள் அதிக அளவில் சிரம்படுவதை மத்திய அரசு உடனடியாக விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை கேட்டு கொள்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் திருச்சி தெற்கு எஸ்.டி.யூ. மாவட்ட தலைவர் கே.கே.மஸ்தான், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஹாஜி சம்சுதீன், தெற்கு மாவட்ட துணைத் தலைவர் மவ்லவி அல்லாபாக்ஸ், கே.ஜலீல், ஆட்டோ சங்க பொருளாளர் ஏ.ஆர். நூர்தீன், ஆட்டோ அப்துல் சலாம், திருச்சி மாவட்ட கேஎம்சிசி மாவட்ட செயலாளர் முஹம்மது ஷாகீர், போட்டோ ஜாகீர், யூத் லீக் ஷாகுல் ஹமீது, அரியமங்கலம் முஸ்தபா மற்றும் யூத் லீக், எஸ்.டி.யூ., பிரைமரி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி தெற்கு மாவட்ட பொருளாளர் பி.எம். ஹூமாயூன் நன்றி கூறினார்.