ரூ.55 இலட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்திய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

0 339
Stalin trichy visit

காவல் ஆணையர் G.கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கெள்ளும் வகையில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, அனைத்து சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.

அதன்படி கடந்த 20.11.2022-ந்தேதி, திருச்சி சென்னை பைபாஸ் சாலை, சஞ்சீவிநகர் சந்திப்பில், இளையதலைமுறையினர் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா போதை பொருள்கள் Vimal Pan Masala, Hans Chaap, Cool LIP ஆகியவற்றை விற்பனை செய்தவதற்காக கிருஷ்ணசிரி மாவட்டம், ஒசூரில் இருந்து இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் 50 மூட்டைகளில் சுமாரூ.ர் ரூ.55,00,000/- மதிப்புள்ள 1070 கிலோ குட்கா போதை பொருட்ள்களை வெங்காய மூட்டைகளுக்கிடையே வைத்து பதுக்கி கடத்தி வந்த, கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டபள்ளியை சேர்ந்த சீனா (எ) சீனிவாசன் 27/22 த.பெ.மணி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தப்பள்ளியை சேர்ந்த சேகர் 28/22 த.பெ.கோவிந்தப்பா ஆகியோர்களை கைது செய்து, வழக்குப்பதிவு செய்தும், நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும், நிதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிரிகள் எதிரிகள் சீனா (எ) சீனிவாசன் மற்றும் சேகர் ஆகியோர்கள் தொடர்ந்து குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்பவர்கள் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்பந்தபட்ட கோட்டை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

மேலும், திருச்சி மாநகரில் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்பவர்கள் மீதும், பள்ளி மற்றும் முக்கிய அலுவலகங்கள் அருகே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.