விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல்
மணப்பாறை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவேந்தல் நடைபெற்றது. அதில் நகர செயலாளர் சீரா ஆனந்தன் தலைமையிலும், கரூர் நாடாளுமன்ற துணை செயலாளர் சீகை. செல்வராசு, வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கதிர் செந்தில், தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன்.ஒ.துணை. செயலாளர் அ.க.பிரபாகரன் அவர்கள் முன்னிலையிலும், ஒ.பொருளாளர் பரமசிவம், நகர பொருளாளர் முகமது இப்ராஹிம், நகர பொறுப்பாளர் ஹக்கீம், ராசிக் முகமது, ஒ.பொறுப்பாளர் மணிவேல், ராமநாதன், மக்கள் அதிகாரம் நகர அமைப்பாளர் லாரன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்று நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர்.