தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் வழிபாட்டு உரிமை பாதுகாப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
இந்தியாவின் அடையாளமாக திகழ்ந்த 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாபர் பள்ளிவாசல் 1992 – ம் ஆண்டு இடிக்கப்பட்டதை கண்டித்தும் , ஆவணங்களின் அடிப்படையிலும் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படாமல் ஒருதலை பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும் , இனி ஒரு பள்ளிவாசலை இடிக்க அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் , தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி மாவட்டம் சார்பாக வழிபாட்டு உரிமைக்கான பாதுகாப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் 06-12-2022 மாலை 4.00 மணியளவில் திருச்சி , மரக்கடை அருகில் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் M.A. முகமது ராஜா தலைமை தாங்கினார் . மேற்கு மாவட்ட தலைவரும் , கவுன்சிலருமான A. பைஸ் அகமது , MC . , வரவேற்புரை ஆற்றினார் . தமுமுக தலைமை பிரதிநிதி கோவை சாதிக் அலி , திராவிட பேச்சாளர் நாஞ்சில் சம்பத் , திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா தலைவர் மௌலானா ரூஹூல் ஹக் , காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி , தமுமுக மகளிர் பேரவை மாநில செயலாளர் ஷான் ராணி ஆலிமா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர் . தமுமுக மாவட்ட செயலாளர்கள் S. இப்ராஹிம்ஷா ( மே ) , N. இலியாஸ் ( கிழ் ) . மமக மாவட்ட செயலாளர்கள் A. இப்ராஹிம் ( மே ) . A. அஷ்ரப் அலி ( கிழ ) , மாவட்ட பொருளாளர்கள் N. ஹூமாயூன் ( மே ) , M. காஜா மொய்தீன் ( கிழ ) , மாவட்ட துணை தலைவர் மணவை அக்பர் ( மே ) . M. சையது முஸ்தபா ( கிழ ) , மாவட்ட துணை செயலாளர்கள் A. அப்துல் சமது , R. அப்துல் ரஹ்மான் . M. ஹூமாயூன் கபீர் , S. சம்சுதீன் , A. ரகமத்துல்லாஹ் , A. ரம்ஜான் அலி , மமக மாவட்ட துணை செயலாளர்கள் A. அகமதுல்லாஹ் , S. அப்துல் சமது , D. முகமது காசிம் , A. அப்துல்லாஹ் , S. அப்துல் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அணி நிர்வாகிகள் , பகுதி , வார்டு , நிர்வாகிகள் , பெண்கள் , குழந்தைகள் , ஜமாத்தார்கள் , சமூக ஆர்வலர்கள் , ஜனநாயக சக்தி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள்