குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

0 262
Stalin trichy visit

திருச்சி பொன்மலை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சோமசுந்தரம்நகர் அருகே கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பெறப்பட்ட புகாரின்பேரில், ஹரிஹரசுதன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் 25-ந் தேதி திருச்சி ரெயில்வே ஜங்ஷன் நடைமேடையில் டிபன் விற்பனையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,050-ஐ பறித்ததாக கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதர் (22) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் ஹரிஹரசுதன் மீது காந்திமார்க்கெட்டில் ஒரு கொலை வழக்கும், ஸ்ரீதர் மீது ரெயில் பயணிகளிடம் செல்போன் மற்றும் பணம் பறித்த வழக்கு, ஸ்ரீரங்கத்தில் காவலாளி, அவரது மனைவியை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கு உள்பட 5 வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து இவர்களது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரசுதன், ஸ்ரீதர் ஆகியோரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவின் நகல் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.