கஞ்சா விற்பனை மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது..
திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், கொலை மற்றும் கத்தியை காண்பித்து வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவர்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடபடிக்கை மேற்கொள்ளவும், வாகள தணிக்கை செய்து, குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்குஉரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
கடந்த 08.06.22-ந்தேதி ஸ்ரீரங்கம் கும்படம்தோப்பு அருகில் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3000/- பணத்தை கொள்ளையடித்து சென்றதாக பெற்றப்பட்ட புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் எதிரிகள் 1)விக்கி (எ) ராமசந்திரன் 21/22 த.பெ.மணி 2)பாலு (எ) பாலகிருஷ்ணன் 27/22 த.பெ.ரெங்கையன் ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் எதிரி விக்கி (எ) ராமசந்திரன் மற்றும் எதிரி பாலு (எ) பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்த வழக்கு, பழ வியாபாரியை கத்தியை காட்டி பணம் கொள்ளையடித்த வழக்கு உட்பட 10 வழக்குள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
எனவே, எதிரிகள் 1) விக்கி (எ) ராமசந்திரன் 2) பாலு (எ) பாலகிருஷ்னான் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், ஆயுதங்களை கொண்டு கொலை முயற்சி மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் கொள்ளையடிப்பதும், கொள்ளையடிக்க கூட்டுசதி செய்தும், மேலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர் என விசாரணையில் தெரிய வருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையரால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.