ஸ்ரீரங்கத்தில் பிரபல தனியார் விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மீட்பு!

0 629
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள S.M லாட்ஜில் விபச்சாரம் நடப்பதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணையில் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அங்கு விபசாரத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர். தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(33) விராலிமலை சேர்ந்த மதி(25) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருவானைக்காவல் சன்னதி தெருவைச் சேர்ந்த முருகன் மற்றும் காட்டுப் பகுதியை சேர்ந்த பிரசன்னா ஆகியோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.