திருச்சியில் பட்டாசு விற்பனை மற்றும் இருப்பு வைத்தலுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்; ஆட்சியர் தகவல்!

0 478
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் எதிர்வரும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு புதிய தற்காலிக பட்டாசு சில்லரை வணிகம் செய்ய இருப்பு வைத்துக் கொள்ள உரிமை கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008 உரிய ஆவணங்களுடன் வருகின்ற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் 22ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் புதிய தற்காலிக பட்டாசு சில்லரை வணிகம் செய்ய இருப்பு வைத்துக் கொள்ள உரிமை கோரும் விண்ணப்பங்களை 22ஆம் தேதிக்குள் இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து கொள்ள வேண்டும் எனவும், பின்னர் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.