திருச்சி மண்டலத்தில் கைப்பற்றப்பட்ட 2082.40 கிலோ கிராம் கஞ்சா தீயிட்டு அழிப்பு

0 306
Stalin trichy visit

திருச்சி மத்திய மண்டலத்திலுள்ள திருச்சி, புதுக்கோட்டை, கரூர்,பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் திருச்சி மாநகர காவல்துறையினர் கடந்த 2019 முதல் 2021 வரையிலான பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப் பொருளினை அழிக்கும் பொருட்டு மண்டல அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு, அக்குழுவிற்கு தலைவராக திரு. ஆ. சரவண சுந்தர், காவல்துறை துணைத்தலைவர், திருச்சி சரகம். அக்குழுவின் உறுப்பினர்களாக காவல் கண்காணிப்பாளர் திருவாரூர் மாவட்டம், காவல் துணை ஆணையர்,

திருச்சி மாநகரம் வடக்கு, காவல் கூடுதல் கண்காணிப்பாளர் CWC,

திருச்சி மாவட்டம், காவல் துணைக் கண்காணிப்பாளர், மது விலக்கு

அமலாக்கப்பிரிவு, திருச்சி மாவட்டம் மற்றும் இணை இயக்குனர், தடய அறிவியல் ஆய்வகம் ஆகியோர் முன்னிலையில் இன்று 28.06.2022 ஆம் தேதி காலை 09.00 மணியளவில் M/S Medicare Enviro Systems,

அயோத்திப்பட்டி ரோடு, செங்கிபட்டி கிராமம், தஞ்சாவூர் மாவட்டம் என்ற இடத்தில் 2082.340 கிலோ கிராம் மதிப்புள்ள கஞ்சா  தீயிட்டு கொளுத்தி அழிப்பு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.