முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் 23-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு..
மாநில இளைஞரணி துணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழி 23ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
முதல்வரின் உற்ற நண்பர், முன்னாள் கழக இளைஞர் அணி துணைச் செயலாளர்-முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் 23’ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கழக முதன்மைச் செயலாளர், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு , திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி இல்லத்தில் திருவருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட கழக நிர்வாகிகள் புடை சூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மத்திய மாவட்ட கழகப் பொறுப்பாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் மு அன்பழகன், அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், வன்னை அரங்கநாதன், செந்தில், மதிவாணன் மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள் ஒன்றிய கழகச் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டார்கள்.
