திருச்சியில் 27 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் – உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி!

0 383
Stalin trichy visit

திருச்சியில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் பேரில் காவல்துறை, வணிகவரித்துறை, மாநகராட்சி ஊழியர்கள், திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பெரிய கடைவீதி, கம்மாள தெரு மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று 97 கடைகளில் இக்குழு ஆய்வு செய்யப்பட்டது. அதில் சந்தேகத்திற்கிடமான புகையிலைப் பொருள்கள் சுமார் 21 கிலோ கைப்பற்றப்பட்டு ஒரு உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில்…”திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 -ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடைசி சீல் வைக்கப்பட்டு மூடப்படும் என்று கூறினார். இதுபோன்ற உணவு சம்பந்தமான கலப்படங்களுக்கு 95 85 95 95 95 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்” என்றும் கூறினார்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

 

Leave A Reply

Your email address will not be published.