சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 2 வது வார பூச்சொரிதல் விழா

0 133
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 16 திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 2 வது வார பூச்சொரிதல் விழாவில் வெகு விமர்சையாக மேளதாளம் முழங்க மின் விளக்குகளால் வாகனத்தை அலங்கரித்து அதில் அம்மன் சிலை மற்றும் படத்தினை வைக்கப்பட்டு  லட்சக்கணக்கான பக்தர்கள்  பூ – கூடைகளை சுமந்து வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டுச் சென்றனர்.

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முக்கிய தலமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற பூச்சொரிதல் விழா ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசிஞாயிறு தொடங்கி, பங்குனி கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள்நடைபெறும்.

இந்நாட்களில், மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய், தீவினை அணுகாது சகல நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மரபுமாறி, அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பார்.

இதன்படி கடந்த வாரம் 8ம் தேதி அதிகாலை பச்சைப் பட்டினி விரதத்தை அம்மன் தொடங்கினார். தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாகனம், வாஸ்து சாந்தி முடிந்து, சமயபுரம் மாரியம்மனுக்கு காப்புக் கட்டுதலுடன் பூச்செரிதல் விழா தொடங்கி நடைபெற்றது.

இந்நிலையில் இரண்டாவது வாரமான நேற்று திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரைவிடிய விடிய மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வாகனங்களில் அம்மன் சிலை மற்றும் அம்மன் படம் வைத்து பூக்களை வைத்து அம்மன் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பூத்தட்டு கலை சுமந்து மேளதாளங்கள் முழங்க கடைவீதி வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி பயபக்தியுடன் வழிபட்டனர்.

பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சூரிய நாராயணன் உள்ளிட்டோர் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.