காவல்துறையினரை தாக்கிய 3 பேர் கைது

0 373
Stalin trichy visit

திருச்சி அரியமங்கலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்   சந்திரமோகன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் ஸ்டாலின் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் ஆட்டோவில் இருந்த அண்ணா நகரை சோந்த முத்துக்குமார்(வயது 29), இவரது தம்பி இளவரசன்(25), காவேரிநகர் திடீர் நகரை சேர்ந்த சரவணன்(23) ஆகியோர் அரிவாளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதுபற்றி காவல்துறையினர்  அவர்களிடம் கேட்டபோது அங்கு வந்த ரேணுகாதேவி(29), கிருஷ்ணவேணி(26) ஆகியோர் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தனர். மேலும் முத்துக்குமார், இளவரசன், சரவணன் ஆகிய 3 பேரும் சேர்ந்து காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி கீழே தள்ளி விட்டனர். மேலும் அங்கு நின்று கொண்டிருந்த காவல்துறை வாகனத்தையும் சேதப்படுத்தினர். தொடர்ந்து காவல்துறையினரை அரிவாளை காட்டி மிரட்டி அங்கிருந்து 5 பேரும் தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் அரியமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, முத்துக்குமார், இளவரசன், சரவணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான ரேணுகாதேவி, கிருஷ்ணவேணி ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.