வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 44 ஊராட்சி செயலர்கள் அதிரடி பணி இடமாற்றம்

0 109
Stalin trichy visit

திருச்சி, பிப்.9  தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் 12 ஆயிரத்து 238 ஊராட்சி செயலாளர்களை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கக் கோரி சென்னையில் கிராம ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

கடந்த 6ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடந்த முதல்கட்ட போராட்டத்தின்போது அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர்.

இதனை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அறிவிக்கப்பட்ட காலக்கெடுவை கடந்தும் அரசாணை வெளியிடப்படாததால் தொடர்ந்து ஊராட்சி செயலாளர்கள் 13வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில்  போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்டத்தில் பணி புரியும் 44 ஊராட்சி செயலாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.