பைக்கை சேதப்படுத்திய இருவர் கைது
திருச்சி ஆக 1 திருச்சி கீழ சிந்தாமணி புது தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 28) சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு வெளியே இருசக்கர வாகனங்கள் நின்று கொண்டிருந்தது. அப்பொழுது சிந்தாமணி பகுதியை சேர்ந்த மனோஜ் (வயது 21) புதுவை நகரை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 26) ஆகிய இரண்டு பேரும் தெருவில் நடந்து செல்லும் போது அங்கு இருந்த இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி உள்ளனர்.
இதனை பார்த்த விக்னேஷ் அவர்களிடம் கேட்டபோது மனோஜ், விக்னேஸ்வரன் இருவரும் சேர்ந்து தகராறில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் மூன்று பேரும்தாக்கிக் கொண்டு காயம் அடைந்தனர்.இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் கோட்டை போலீஸில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் மனோஜ், விக்னேஸ்வரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.இருவரும் காயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.