ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
திருச்சி, டிச.19 திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரையில் இந்து சமய அறநிலைதுறைக்கு சொந்தமான யாத்ரி நிவாஸ் பக்தர்கள் தங்கும்விடுதியில் தஞ்சை மாவட்டம் திருவையாரைச்சேர்ந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 67). இவரது மனைவி செண்பகவல்லி (வயது 65). இருவரும் தனது 42 வயது மகள், 37வது மகள் ஆகிய இருவருடன் கடந்த 10-ந் தேதி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸில் வந்து தங்கியுள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக வெளியே வரவில்லை. அவர்கள் தங்கியிருந்த அரை பூட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று காலையில் துர்நாற்றம் வீசியது. இதை பார்த்ததும் ஊழியர்கள் சந்தேகத்தின் பெயரில் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஸ்ரீரங்கம் போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது 4 பேரும் உணவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.அழுகிய நிலையில் பிணத்தை மீட்டு ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி தொடங்கியுள்ள நிலையில் இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.