போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி உள்பட 4 பேர் கைது

0 130
Stalin trichy visit

திருச்சி டிச 10-திருச்சி பாலக்கரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பெல்சி மைதானம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்த பாலக்கரை காஜாப்பேட்டை பசுமடம் பகுதியை சேர்ந்த ஜமால் முகமது செலர்ஷா (வயது 23)ஜமால் முகமது (வயது 24) குட்ஷெட் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய செல்வகுமார் (வயது 24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 48 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். இவர்களில் முகமது செலர்ஷா ரவுடி பட்டியலில் உள்ளார்.
இதேபோன்று குட்ஷெட் ரோடு பாலம் தெரு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த செபாஸ்டின் சுனில் (வயது 24) பிரித்திவிராஜ் (வயது 21) சதீஷ்குமார் (வயது 35)ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 100 மாத்திரைகளைபோலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.