கஞ்சா விற்ற பெண் உள்பட மூன்று பேர் கைது

0 149
Stalin trichy visit

திருச்சி, டிச.10 திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மில் காலனி பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 38 ) என்பவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் . இதே போன்று பொன்மலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தங்கேஸ்வரி நகர் மாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்க கொண்டிருந்த பாரதன் (வயது 30)என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோன்று அரியமங்கலம் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த நிலோபர் நிஷா (வயது 22) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.பிறகு இவர்களில் நிலேபர் நிஷா மற்றும் பரதன் ஆகியோரை போலீசார் ஜாமினில் விடுதலை செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.