மக்கள் பணியில் 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், பர்மா காலனியில் ரோடு போடும் பணிகளையும், பர்மா காலனியில் நேதாஜி பொதுப்பணி மன்றம் சார்பில் கொடுத்த புகாரின் பேரில் ஆக்கிரமிப்பு இடங்களையும் A.E.E.ஜெகஜீவன்ராம், A.E.நரசிம்ம மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் மேலும் பிலோமினாள் புரம் பள்ளிக் கூடத்தின் வாசலை சுத்தம் செய்த பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஆயில் மில் ரோடு, காவேரி நகர், போஸ் தெரு, மலையப்ப நகர் ஆகிய இடங்களில் குப்பைகளை பொது மக்கள் கொட்டாதவாறு அறிவிப்பு பலகை வைத்தும்,

பர்மா காலனி சிறுவர் பூங்காக்களை சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த போது,கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
