திருச்சியில் போலி பாஸ்போர்ட் வழக்கில் 5 பேர் கைது

0 201
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 5 திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து திருச்சி திரும்பிய விமான பயணிகளின் ஆவணங்களை குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர் இதில் புதுக்கோட்டை ஆதனக்கோட்டை கருத்துடையான் பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை (வயது 40) என்பவர் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்டில் அவரது பிறந்த தேதியை மாற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதை தொடர்ந்து அவரை விமான நிலைய காவல்துறையினரிடம் அவரை ஒப்படைத்தனர். இதைப் போன்று மலேசியாவில் இருந்து திருச்சி திரும்பிய திருவாரூர் தண்டலை குடியான தெரு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (48) என்பவர் பாஸ்போர்ட்டில் போலி முத்திரை பதித்ததாக கைது செய்யப்பட்டார். மேலும் திருச்சி வந்த கோலாலம்பூர் விமானத்திலிருந்து இறங்கிய சிவகங்கை காரைக்குடி மீனாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முகமது காசிம் (58) என்பவர் அவரது முகவரி பெயரை மாற்றிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார் இதேபோன்று ராமநாதபுரம் புதுவலசை கிழக்கு தெருவை சேர்ந்த ஜாகிர் உசேன் (54) என்பவரும் புதுக்கோட்டை பொன்னமராவதி சேவலூர் பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மாள் (72) என்பவரும் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டனர். ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் 5 பேர் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.