திருவெறும்பூர் அருகே ரவுடி மர்ம நபர்களால் வெட்டிகொலை

0 15
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 8  திருவெறும்பூர் அருகே ரவுடி மர்ம நபர்களால் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் மகபூ பாஷா இவரது மகன் பாதுஷா (24) பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரவுடி ஆவார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் செக் போஸ்ட் காமராஜர் நகர் வினோபாஜி தெரு பகுதியில் மர்ம நபர்கள் பாதுஷாவை வெட்டி உள்ளனர் இதில் சம்பவ இடத்திலேயே பாதுஷா உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதோடு உடனடியாக திருச்சி எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரேவிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிரவின் உமேஷ் டோங்ரே சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.

அதன் பிறகு பாதுஷாவின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாதுஷா கொலை செய்யப்பட்டதற்க்குரிய காரணம் என்ன வென்று விசாரணை மேற்கொண்டு வந்த விசாரணையில் பாதுஷா அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் கள்ள தொடர்பு இருந்ததாகவும் இதனால் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட மோதலில் பாதுஷாவின் வலது கையின் கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் துண்டானதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பாதுஷா அந்த பெண்ணிடம் மீண்டும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது அதனால் கொலை நடந்திருக்குமோ என்று சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது மேலும் ரவுடி கோஷ்டியில் ஏற்பட்ட மோதலா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.