சிறுமிக்கு பாலியல் தெந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

0 306
Stalin trichy visit

திருச்சி, அக்.1 திருச்சி மணப்பாறை பூசாரிப்பட்டி ஆண்டவர்கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(53). இவர் கடந்த 2020- ஆம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் மணப்பாறை அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் அருள்செல்வி வாதாடினார். வழக்கை விசாரித்த மகிளா கோர்ட்டு அமர்வு நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பு கூறினார். இதில் மாரியப்பனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.