கல்லக்குடி ஜல்லிக்கட்டு போட்டியில் 51 பேர் காயம்

0 339
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 744 காளைகளும் 385 வீரர்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றனர்.

புள்ளம்பாடி அருகே கல்லக்குடியில் தமிழக முதல்வரின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சேலம், திண்டுக்கல், பெரம்பலூர், கரூர், அரியலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து 744 ஜல்லிக்கட்டு காளைகளும்,385 வீர்ர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதனை செய்தனர்.பின்னர் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் முன்னிலையில் ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது பின்னர் வரிசைப்படி ஜல்லிக்கட்டு காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சென்றாலும் ஒரு சில காளைகளை வீரர்கள் அடக்கினார் இந்த போட்டியில் சிறந்த காளைகளுக்கு முதல் பரிசாக கார்,2 மற்றும் 3 வது பரிசாக மோட்டார் பைக் வழங்கினர். மேலும். வீர்ர்களுக்கு கட்டில் பீரோ மிக்சி கிரைண்டர் பேன்,வேஷ்டி, சேலைகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.இந்த போட்டியில் வீரர்கள் காலை உரிமையாளர்கள் பார்வையாளர்கள் என மொத்தம் 51 பேர் காயமடைந்தனர் காயம் அடைந்தவர்களுக்கு அங்குள்ள மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர் இதில் 5 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு லால்குடி டிஎஸ்பி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.