மணப்பாறை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் சிக்கியது

0 410
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மாகாளிப்பட்டியில் மணப்பாறை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இதில் அதிக அளவிலானோர் வந்து ஓட்டுனர் உரிமம் பெற்றுச் செல்வதோடு, வாகனங்கள் தொடர்பான பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்சம் அதிக அளவில் வாங்குவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் திருச்சி லஞ்சஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்ட் மணிகண்டன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் இருந்தது.

இதையடுத்து அலுவலகம் முழுவதும் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். மேலும் பணம் வைத்திருந்த நபர்களிடமும் தொடர்ந் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் வழக்கு பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.