கொரோனா தொற்றால் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் பலி : திருவெறும்பூரில் பரபரப்பு
திருவெறும்பூர் பகுதியில் கொரொனா தொற்றிற்கு ஆரம்ப சுகாதார நிலையம் செவிலியர் பலியான சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவெறும்பூர் அருகே உள்ள கணேச புரத்தைச் சேர்ந்தவர் சாந்தி (54) இவர் அரசன் குடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பத்தாளப்பேட்டையில் வேலைபார்த்து வந்தார்.இந்த நிலையில் சாந்தி உடல்நிலை சரியில்லாத கடந்த 11ம் தேதி விடுப்பில் துறையூரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு உடல்நிலை பாதிக்கப்படும் அவர் அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சாந்திக்கு கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தியை நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை பரிதாபமாக சாந்தி உயிரிழந்தார்.இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் திருவெறும்பூர் பகுதியில் இன்று 90 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.