முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 20 ஆயிரம் வழங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர்.

0 187
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் லூர்துசாமி (வயது 78). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் இன்று காலை மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் வட்டாட்சியர் லஜபதிராஜிடம் முதல்வரின் கொரோனா நிவாரணத்திற்காக நிதி வழங்க வந்துள்ளதாக தெரிவித்த அவர் அங்கேயே ரூபாய் 20 ஆயிரத்திற்கான காசோலையை பூர்த்தி செய்து வட்டாட்சியரிடம் வழங்கினார். காசோலையை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.