திருச்சி விமான நிலையத்தில் துணியில் தடவி தங்கத்தை கடத்தி வந்த நபரை மடக்கிப் பிடித்த அதிகாரிகள்

0 492
Stalin trichy visit

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்த நபரை அதிரடியாக மடக்கிப் பிடித்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்.திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர்,துபாய், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

அதில் வெளி நாடுகளிலிருந்து தாயகம் திரும்ப கூடிய பயணிகளில் ஒரு சிலர் தங்கத்தை கடத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் இன்று துபாயில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்தவர்களை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

 

அதில் ஒரு பயணி தன்னுடைய உடைமைகள் அடங்கிய பைக்குள் துணி வடிவில் தங்கத்தை ஒட்டி எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அது 255 கிராம் எடையுள்ள 12 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் என்று மதிப்பிட்டுள்ளனர் –

தொடர்ந்து அந்த பயணியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.