இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் கான்பூரில் உள்ள மேம்பட்ட கருவிகள் மற்றும் ஆயுதங்கள் இந்தியா லிமிடெட் பிரிவின் அங்கமாக உள்ள திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் உள்ள ஜூனியர் ஸ்டாப் கிளப் வளாகத்தில் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.
கண்காட்சியில் முப்படைகளில் பயன்படுத்தப்படும் நவீன பாதுகாப்பு ஆயுதங்கள், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பல்வேறு வகையான துப்பாக்கிகள், இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பழங்கால ஆயுதங்களின் தொகுப்புகள் இடம்பெற உள்ளன.
கண்காட்சியை 13-ந் தேதி (திங்கட்கிழமை) வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார். கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புக் கருவிகள், ஆயுதங்களை பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட அனுமதிக்கப் பட்டுள்ளது.
கண்காட்சியை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம். கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கண்காட்சி நடைபெறும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை துப்பாக்கித் தொழிற்சாலை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.