அமைச்சருடன் கே.என்.நேருவுடன் ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் மரியாதை நிமித்தம் சந்திப்பு

0 247
Stalin trichy visit

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். திருச்சியில் திமுக 9 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. கே என் நேரு மற்றும் மகேஷ் பொய்யாமொழி அமைச்சர்களாக பொறுப்பேற்று உள்ளனர். இந்நிலையில் கே என் நேருவை மரியாதை நிமித்தமாக ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர் திமுக தில்லைநகர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அமைச்சர் நேருவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அங்கு உள்ள திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் அர்ச்சகர் சுந்தர் பட்டர் மஞ்சள் வைத்து ஆசிர்வாதம் செய்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.