பஸ் நிலையத்தில் குட்கா விற்ற இருவர் கைது
திருச்சி மாவட்டம், லால்குடியில் பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பதாக லால்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது லால்குடி புதுத் தெருவைச் சேர்ந்த 60 வயதான பாஸ்கரன் மற்றும் லால்குடி அருகே பம்பரம்சுத்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் தர்மராஜ் (வயது 38) ஆகியோர் குட்கா புகையிலை விற்பது தெரிய வந்தது.
அவர்களை பிடித்து விசாரணை செய்த போலீசார் அவர்களிடமிருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த லால்குடி போலீசார் லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முசிறி கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.